;
Athirady Tamil News

வவுனியாவில் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தம்!! (படங்கள்)

0

வவுனியா உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . இதையடுத்து அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக இன்றைய தினம் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு சென்ற நகரசபை தவிசாளர், செயலாளர் உள்ளிட்ட குழுவினரால் தற்காலிகமான தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருப்புப்பகுதியில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் இவ்விடயம் குறித்து நகரசபையினருக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டிருந்தது . இந்நிலையில் இன்று காலை உக்குளாங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் நகரசபை தவிசாளர் செயலாளர் நகரசபை உறுப்பினர்கள் , பிரதேச சபை தவிசாளர் ஒன்றுகூடி மக்களின் கருத்து அறியப்பட்டுள்ளது .

இதையடுத்து கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பகுதிக்கு சென்ற குழுவினர் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக தடுத்து நிறுத்துமாறு காணி உரிமையாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது இது குறித்து ஏற்கனவே நகரசபையினரில் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய நகரசபை செயலாளர் இப்பகுதி மக்கள் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைப்பதற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றனர் .

எனவே இதன் பணிகளை காணி உரிமையாளர் ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது . இன்னும் சில தினங்களில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடை உத்தரவு பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . எனவே அது வரையிலும் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு இன்றைய தினம் நகரசபிைனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இதேவேனை நேற்றைய தினம் அப்பகுதி கிராம மக்களின் கையெழுத்திட்ட முறைப்பாட்டு கடிதம் மற்றும் தொலைத் தொடர்பு அமைப்பதற்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் என்பன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்துமாறு கோரிய முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதையடுத்தே இன்றைய தினம் மக்களுடன் அவசர கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.