சர்வதேச மகளீர் தினத்தை முன்ணிட்டு விழிப்புணர்வு பேரணியும் கௌரவிப்பும் நிகழ்வும்!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளத்தில் சர்வதேச மகளீர் தினத்தை முன்ணிட்டு ‘நாடும் தேசமும் உலகமும் அவளே’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணியும் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது.
ஏழைப் பெண்களை சாதனை ஆக்குவோம், சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள், பெண்கள் நாட்டின் கண்கள் என்ற கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை தாங்கியவாறும் செட்டிக்குளம் பிரதேச மத்தியில் இருந்து ஊர்வலமாக சென்று செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் முடிவடைந்திருந்து.
அதனை தொடர்ந்து செட்டிக்குளம் பிரதேச செயலகத்தி இடம்பெற்ற நிகழ்வில் 105 வயதுடை செட்டிக்குளம் பிரதேசத்தின் மூத்த மூதாட்டி மாரியாய் என்பவருக்கு பிரதம விருந்தினர் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துல சேனவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் செட்டிக்குளம் பிரதேசத்தின் சிறந்த பெண் சாதனையாளர்களிற்கான கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் சுலோஸனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துல சேன, மாவட்ட செயலக திட்டப்பணிப்பாளர் திருமதி வில்வராஜா, பிரதி திட்டப்பணிப்பாளர் திருமதி பிறைசூடி, உதவி மாவட்டச்செயலாளர் சபர்ஜா, வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை தவிநாளர் ஜெகதீஸ்வரன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

