;
Athirady Tamil News

வவுனியாவில் வயல் அறுவடை விழா கோலகலமாக நடைபெற்றது!! (படங்கள்)

0

வவுனியா பாவற்குளத்தில் வயல் அறுவடை நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.பந்துலசென தலமையில் இன்று (09) கோலகலமாக நடைபெற்றது.


வவுனியா பாவற்குளத்தில் மத்திய நிர்ப்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில், திட்ட முகாமைத்துவக் குழுவினரின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வயல் அறுவடை விழாவின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்றப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.


கடவுளுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும், விவசாயிகளை பாராட்டும் முகமாகவும் பல வருடங்களின் பின் வவனியாவில் பெரிய அளவில் வயல் அறுவடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் என் யோகராஜா தெரிவித்தார்.


பாவற்குளத்தில் அறுவடைக்கு தயாராகியிருந்த நெற் கதிர்களை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிதிகள் இணைந்து அறுவடை செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நெற்கதிர் அறுவடை இயந்திரம் மூலம் வயல் அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.


பாவற்குளம் பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 134 ஏக்கர் பயிர் செய்யப்பட்டுள்ளது. பாவற்குளத்தை சேர்ந்த பன்னிரன்டு கமக்கார அமைப்புக்கள் ஒன்றிணைந்து நிகழ்வில் கலந்து கொண்டதுடன் தங்களுக்கான தேவைகளை அரசாங்க அதிபரிடம் கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் வயல் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


வயல் அறுவடை நிகழ்வில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சன குமார, நீர்ப்பாசன திணைக்களத்தின் முதன்மை பொறியியலாளர் ஏ.கிருசாந்தன், வவுனியா பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் கே.இமாசலன், வவுனியா பிரதேச உதவியாளர் கே.கஜமுகதாஸ் கமக்கார அமைப்பின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.