ஜேசிபி வாகனம் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!! (படங்கள்)

ஜேசிபி வாகனம் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தரும்புரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி தரும்புரம் 7ஆம் யுனிட் பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும் உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் தரும்புரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

