உத்தரகாண்ட் புதிய முதல்-மந்திரியாக திரத்சிங் ராவத் பதவியேற்பு ..!!

இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், டேராடூனில் நேற்று நடந்தது.
இதில் புதிய முதல்-மந்திரியாக திரத்சிங் ராவத் (வயது 56) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரத்சிங் ராவத், கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுடன் சென்று கவர்னர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து அரசு அமைக்க உரிமை கோரினார். கவர்னர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, மாலையில் கவர்னர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் திரத் சிங் ராவத் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
அவர் பதவியேற்றுக்கொண்டதும் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரத்சிங் ராவத், கவர்னர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றார்.