;
Athirady Tamil News

பாஜக அறிவிக்காமலேயே.. வேட்புமனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்.. “பின்னணியில்” குஷ்பு! பரபர தகவல்!! (படங்கள்)

0

வேட்பாளர் பெயரை பாஜக அறிவிக்கும் முன்பாகவே.. திருநெல்வேலியில் அவசர அவசரமாக நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகம் முழுக்க வேட்புமனுத்தாக்கல் நேற்று துவங்கியது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு, திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், பாஜக இன்னும் தங்களது வேட்பாளர் பெயர்களை அறிவிக்கவில்லை.

அதேநேரம், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

அவசரமாக வேட்புமனு

இந்த நிலையில், திடீரென நெல்லையைச் சேர்ந்தவரான, முன்னாள் அதிமுக பிரமுகரும் தற்போதைய பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதி தேர்தல் அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். அவருடன் பாஜக கட்சியினரோ அல்லது கூட்டணி கட்சியினரோ செல்லவில்லை. நயினார் நாகேந்திரனின் மகன் விஜய் மற்றும் அவரது ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தனர்.

நல்ல நாள்

நல்ல நாள்

பாஜக போன்ற ஒரு பெரிய கட்சிகளில் தன்னிச்சையாக இப்படி ஒருவர் முடிவெடுப்பது என்பது சாத்தியமில்லாதது. எனவே நயினார் நாகேந்திரன் செயல்பாடு பெரும் சர்ச்சைக்கு காரணமாகியது. அவரிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டபோது, இன்று நல்ல நேரம் என்பதால் மனுத்தாக்கல் செய்தேன்.. எனக்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன், என்று தெரிவித்தார்.

சுயேச்சை வேட்பாளர்

சுயேச்சை வேட்பாளர்

நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது கட்சி சார்பில் வழங்கப்படும் “பி பார்ம்” கொடுக்கப்படவில்லை. எனவே ஒரு சுயேச்சை வேட்பாளராக இப்போதுவரை கருதப்பட்டு கொண்டிருக்கிறார். அவரது பெயரை கட்சி மேலிடம் அறிவித்த பிறகு, பி பார்ம் கொடுக்கப்படும். அதைக் கொண்டு சென்று தேர்தல் அதிகாரியிடம் வழங்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி எல்லாம் அரைகுறையாக எதற்காக அவசரஅவசரமாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற கேள்விகள் பாஜகவில் உள்ள தொண்டர்கள் மத்தியில் கூட எழுந்துள்ளன. இதன் பின்னணியில் ஒரு பரபரப்பு காரணம் இருக்கிறது.

பின்னணியில் குஷ்பு

பின்னணியில் குஷ்பு

பாஜகவில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கு நடிகை குஷ்பு மேலிடத்தை வலியுறுத்தி வந்தது அனைவருக்கும் அறிந்த ரகசியம். ஆனால் அந்த தொகுதியை அதிமுக பாஜகவுக்கு விட்டுத் தரவில்லை. எனவே பாஜக போட்டியிட உள்ள 20 தொகுதிகளில், அடுத்து தனக்கு சாதகமான தொகுதி என்று குஷ்பு கருதுவது நெல்லை தொகுதியைத்தான். இதற்கு முக்கியமான காரணம் நெல்லை தொகுதியில் பிள்ளைமார் ஜாதியினர், வேட்பாளரின் வெற்றி தோல்வியில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

குஷ்பு திட்டம்

குஷ்பு திட்டம்

குஷ்பு கணவர் சுந்தர் சி அந்த ஜாதி பிரிவைச் சேர்ந்தவர். ஒரு முறை தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய குஷ்புவை அழைத்து வந்தபோது இந்த தகவலை நயினாரே தொண்டர்கள் மத்தியில் சொல்லியிருந்தார். இதன் மூலம் தனக்கு ஆதரவு பெருகும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் இப்போது சாட்சாத் குஷ்புவே இந்த தொகுதிக்கு குறி வைக்கிறார் என்று தெரிந்ததும், தான் வகுத்த வியூகம் தனக்கு எதிராகவே திரும்பி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, அவசர அவசரமாக ஓடி சென்று வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார் என்கிறார்கள் கட்சியினர்.

வாய்ப்பு முக்கியம்

நயினார் நாகேந்திரன் இருமுறை திருநெல்வேலி எம்எல்ஏவாக இருந்தவர். அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர். அவர் பாஜகவில் இணைந்த பிறகு கடந்த லோக்சபா தேர்தலில் சம்மந்தமே இல்லாத தொகுதியான ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். எனவே இந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார். எனவே, அடுத்ததாக குஷ்பு வேறு தொகுதி ஒதுக்குமாறு கேட்பாரா, இதே தொகுதியை கேட்டு மேலிடத்தை வலியுறுத்துவாரா, இதன் மூலம் கட்சிக்குள் பூசல் உருவாகுமா அல்லது வேறு தொகுதியை கொடுத்தால் குஷ்பு போட்டியிடுவாரா என்று பல்வேறு யூகங்கள் ரெக்கைகட்டி பறக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.