கேரளாவில் டிக்கெட் மறுப்பால் அதிருப்தி- மொட்டையடித்து எதிர்ப்பை தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி ..!!

கேரள சட்டசபை தேர்தலில் எட்டுமன்னூர் தொகுதியில் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி லத்திகா சுபாஷ் போட்டியிட விரும்பினார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
ஆனால் அவருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. இது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அத்தோடு நிற்காமல், தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யும் விதத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலக முற்றத்தில் வைத்து அவர் தலையை மொட்டையடித்துக்கொண்டார்.
கேரள சட்டசபை தேர்தலில் டிக்கெட் மறுப்பால் மொட்டையடித்துக்கொண்ட முதல் அரசியல் கட்சியின் தலைவர் என்ற பெயரை லத்திகா சுபாஷ் தட்டிச்செல்கிறார்.