புங்குடுதீவில் பாடசாலை மாணவர்களுக்கு, “கல்விக்கு கரம் கொடுப்போம்” உதவி.. (படங்கள் வீடியோ)

புங்குடுதீவில் பாடசாலை மாணவர்களுக்கு, “கல்விக்கு கரம் கொடுப்போம்” உதவி.. (படங்கள் வீடியோ)
புங்குடுதீவு இறுப்பிட்டி ஐந்தாம் வட்டாரத்தை சேர்ந்த, லண்டனில் வதியும் யசோதரன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜனிதன் அவர்களின் முதலாவது பிறந்ததினத்தை முன்னிட்டு “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் நிகழ்வின் கீழ் புங்குடுதீவில் நூறு வருடங்களை பூர்த்தி செய்த பாடசாலைகள் மூன்றின் மாணவ மாணவிகளுக்கு அப்பியாசப் புத்தகங்கள் அவர்களின் குடும்பத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
புங்குடுதீவில் நூறு வருடங்களை பூர்த்தி செய்த பாடசாலைகளில் மூன்றான “அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயம்”, “ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்”, “ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம்” மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி உதவியினை செல்வன்.ஜனிதனின் பெற்றோர், லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபைத் தலைவர் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்கள் ஊடாக “புங்குடுதீவு சர்வோதயத்தின்” ஏற்பாட்டில் செய்யுமாறு கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, வட இலங்கை சர்வோதய (புங்குடுதீவு) அறங்காவலர் செல்வி.பொ. ஜமுனாதேவி, வட இலங்கை சர்வோதய (புங்குடுதீவு) நிர்வாகப் பொறுப்பாளர் செல்வி.க.புஷ்பமணி ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றன.