மக்காவுக்கு தடுப்புமருந்தேற்றப்பட்ட யாத்திரிகர் மாத்திரம்!!

கொவிட்-19-க்கெதிரான தடுப்புமருந்தேற்றப்பட்டவர்கள் மாத்திரமே, புனித மாதம் ரமழானிலிருந்டு ஆரம்பிக்கும் உம்ராஹ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்களென சவுதி அரேபிய அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.
தடுப்புமருந்தேற்றப்பட்டவர்களுக்கு மாத்திரமே உம்ராஹ் கடமையை நிறைவேற்ற, புனித நகரான மக்காவிலுள்ள பெரிய பள்ளியில் பிரார்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படுமென அறிக்கையொன்றில், ஹஜ் மற்றும் உம்ராஹ் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில், கொவிட்-19 தடுப்புமருந்தை இரண்டு தடவைகள் பெற்றவர்களும், யாத்திரைக்கு குறைந்தது 14 நாள்களுக்கு முன்னர் முதலாவது தடுப்புமருந்தைப் பெற்றவர்கள் அல்லது கொவிட்-19-இலிருந்து குணமடைந்த தனிநபர்கள் உள்ளடங்குவதாக இவ்வமைச்ச்சு தெரிவித்துள்ளது.