முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கொரோனா அறிகுறி – மருத்துவமனையில் சிகிச்சை!!

சட்டசபைத் தேர்தலுக்காக தொடர் பிரசாரம் செய்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சகாயம் அரசியல் பேரவை என்ற அமைப்பு தொடங்கி, இன்று வாக்குப்பதிவு நடந்துமுடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டார்.
சகாயம் அரசியல் பேரவையின் வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து அவர் சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.