புத்தசாசன அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்படவுள்ள வீடு!! (படங்கள்)
உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஜே 182 கிராம சேவையாளர் பிரிவில் புத்தசாசன அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வினால் நாட்டி வைக்கப்பட்டது.
வீட்டுக்கு அடிக்கல் நாட்டிய பின் ஊடகங்களுக்கு கருத்துரைத்த யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில வீட்டுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் படை அதிகாரிகள் அரச உத்தியோகத்தர்கள் பிரதேச கிராம சேவகர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருக்கின்றோம்
இன்றைய தினம் மூன்று வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கின்றோம் அதில் ஒரு வீடுதான் இந்த உடுவில் பிரதேசத்தில் இன்று அடிக்கல்
நாட்டப்பட்டுள்ளது.
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு புத்தசாசன அமைச்சின் செயலாளரின் ஏற்பாட்டில் அவரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலையகத்தின் ஏற்பாட்டிலே வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மூன்று குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன ஏற்கெனவே யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினரால் 744 வீடுகள் வறிய மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல மேலும் 10 வீடுகள் வீடுகள் விரைவில் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது அதேபோல் தற்போது தேசிய தினத்தை முன்னிட்டு
எதிர்வரும் 24ஆம் திகதி இந்த வீடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது அத்தோடு இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலைமையகத்தினரால்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் அதேபோல் கர்ப்பிணித் தாய்மாருக்கு உலர் உணவு பொதிகள் என்பன இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்படுகின்றன.
அதேபோல வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளும் இராணுவத்தினர் வழங்கப்பட்டுள்ளன எனவே தொடர்ச்சியாக இராணுவத்தினரால் வறிய மக்களுக்கான உதவிகள் வடபகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”