;
Athirady Tamil News

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு!!

0

இலங்கையில் நேற்றைய தினம் (07) அடையாளம் காணப்பட்ட 221 கொரோனா தொற்றாளர்களில் ஆகக்கூடுதலான 54 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் -19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.

களுத்துறையில் 12 பேரும், கண்டியில் 16 பேரும், இரத்தினபுரியில் 29 பேரும், காலியில் 08 பேரும், மாத்தறையில் 05 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

கேகாலை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் தலா ஒரு நோயாளர் வீதமும், கம்பஹா, குருநாகல், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இரு தொற்றாளர்கள் வீதம் பதிவாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 46 பேரும், மொனராகலையில் 03 பேரும், கிளிநொச்சியில் 06 பேரும், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்த 31 பேரும் கொவிட் தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − thirteen =

*