“ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்”.. தங்கச்சியை கல்யாணம் செய்த அண்ணன்.. கடைசியில் அந்த கிளைமேக்ஸ் இருக்கே..!

அண்ணனையே கல்யாணம் செய்துக்கிட்டாராம் தங்கச்சி.. இந்த கல்யாணம் பற்றிதான் ஊரே பரபரப்பாக பேசி வருகிறது. இப்படி ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.. நம்ம ஊர் தமிழ்ப்படங்களைவிட, ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் இந்த கல்யாணம் நடந்து முடிந்துள்ளது. ஜியாங்க்சு என்ற பகுதியில் வசித்து வரும் இளைஞர் அவர்.. இவருக்கு பிடித்த பெண்ணை பார்த்து வீட்டில் கல்யாணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்தனர்…. அதற்காக ஒரு பெண்ணையும் பார்த்து பேசி முடிவு செய்தனர்.. இரு வீட்டிலும் கல்யாணத்துக்கு பூரண சம்மதம்.. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.. ஊரையே அழைத்தனர்..
மாப்பிள்ளை
கல்யாண நாளும் வந்தது.. மாப்பிள்ளை செம குஷியில் மேடையில் தயாராக நின்று கொண்டிருந்தார்.. மணமகள் இன்னும் ரெடியாகவில்லை.. அதனால்,, மாப்பிள்ளையின் அம்மா, மணமகள் ரெடியாகி விட்டாரா என்பதை பார்க்க சென்றார்.. அப்போதுதான், அப்படி ஒரு காட்சியை பார்த்துவிட்டார்… கல்யாண பெண்ணின் உடம்பில் ஒரு தழும்பு இருந்துள்ளது.. அந்த தழும்பு அவர் பிறந்ததில் இருந்தே இருந்திருக்கிறது.. அதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அந்தம்மா, உடனே பெண்ணின் குடும்பத்தாரிடம் விசாரித்துள்ளார்.
பெற்றோர்
அப்போது இன்னொரு அதிர்ச்சி, மாப்பிள்ளையின் அம்மா தலையில் மறுபடியும் வந்து விழுந்தது.. அந்த தழும்பு என்ன ஏதென்று பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்தால், இந்த பெண் அவர்களின் சொந்த மகளே கிடையாதாம்.. தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள்.. 20 வருஷத்துக்கு முன்னாடி ரோட்டோரத்தில் இந்த பெண் அழுதபடி இருந்திருக்கிறார்.. யார் பெற்ற குழந்தையோ, தனியாக அழுகிறாளே என்று தூக்கி வந்து வளர்த்திருக்கிறார்கள்…
அம்மா
இதை கேட்டதும், மாப்பிள்ளையின் அம்மாவுக்கு இன்னொரு இடி தலையில் டமார் என விழுந்தது.. அந்த கல்யாண பெண்ணே இவருடைய சொந்த மகள்தானாம்.. அதாவது 20 வருஷத்துக்கு முன்னாடி, தனக்கு பிறந்த பெண் குழந்தையை தொலைத்து விட்டிருக்கிறார்கள்.. பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.. உடம்பில் இருந்த தழும்பை பார்த்ததும்தான், அது மருமகள் இல்லை, தான் 10 மாசம் சுமந்து பெத்த மகள் என்பதே தெரியவந்துள்ளது.
முத்தம்
இவர்தான் பெற்ற தாய் என்பதை அறிந்த, அந்த கல்யாண பெண், அம்மாவை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார்.. மகளை பிரிந்த தாயும் கட்டியணைத்து கொண்டார்.. இருவரும் ஆளாளுக்கு முத்தம் தந்து கொண்டனர்.. இப்போது அடுத்த சிக்கல் எழுந்தது. கல்யாண பெண், மாப்பிள்ளைக்கு தங்கச்சி ஆகிவிட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர்..
கிளைமேக்ஸ்
இப்போதுதான், கடைசி இடி வந்து, அதாவது கிளைமாக்ஸ் இடி வந்து மொத்த பேரின் தலையிலும் விழுந்தது.. மாப்பிள்ளை கோலத்தில் ஸ்டேஜில் நின்று கொண்டிருக்கிறாரே, அது இவர்களின் சொந்த பிள்ளை இல்லையாம்.. அவரும் வளர்ப்பு மகனாம்..!
கல்யாணம்
20 வருஷத்துக்கு முன்பு, தங்கள் மகளை தொலைத்துவிட்டதால், வேறு ஒரு பையனை தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.. அந்த பையன்தான் இந்த மணமகன்.. அதாவது இவர்கள் சொந்த அண்ணன் – தங்கச்சி இல்லை என்பது தெளிவானது.. இப்போது மாப்பிள்ளையும் – பெண்ணும் பூரிப்பில் திளைத்துவிட்டனர்.. திட்டமிட்டபடியே இந்த கல்யாணம் ஜரூராக நடந்து முடிந்தது.. இதெல்லாம் கேட்டால் நம்ம ஊரு தமிழ்படங்களில் நடப்பது போலவே சீன்கள் நமக்கு வந்து வந்து போவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை..!