;
Athirady Tamil News

கும்பகோணம் தில்லுமுல்லு: 2000 ரூபாய் போலி டோக்கன் கொடுத்த அமமுக நிர்வாகி – ஆர்.கே. நகர் பாணி அல்வா!! (படங்கள்)

0

ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கினார் டிடிவி தினகரன் அதே பாணியை பின்பற்றி கும்பகோணம் தொகுதி வாக்காளர்களுக்கு 2ஆயிரம் ரூபாய்க்கு போலி டோக்கனை கொடுத்து ஏமாற்றியுள்ளார் அமமுக நிர்வாகி. சுவாரஸ்யமான சம்பவம் இந்த சட்டசபைத் தேர்தலில்தான் நடந்துள்ளது. ஆர்.கே. நகர் பாணியில் அல்வா கொடுத்த அமமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணிக்கு கும்பகோணம் தொகுதி ஒதுக்கப்பட்டது. மூமுக கட்சியின் ஸ்ரீதர் வாண்டையார் இத்தொகுதியில் போட்டியிட்டார். திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனே களம் இறங்கினார். அமமுக சார்பில் எஸ்.பாலமுருகன் போட்டியிட்டார். வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை நடந்து முடிந்தது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதையும் மீறி பல டெக்னிக்குகளை பயன்படுத்து வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெற்றது.

கும்பகோணத்தில் நடந்த சம்பவமோ தமிழகம் முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. காலையிலேயே குவிந்த மக்கள் காலையிலேயே குவிந்த மக்கள் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பாட்ராச்சாரியார் தெருவில் உள்ளது பிரியம் மளிகை ஏஜென்சி. இந்த கடையை ஷேக் முகமது என்பவர் நடத்தி வருகிறது. புதன்கிழமை காலையில் கடையை திறந்த உடன் ஏராளமானோர் இந்த கடை முன்பு குவியத் தொடங்கினர். பொருட்கள் வாங்கத்தான் மக்கள் வந்துள்ளனரோ என கடை உரிமையாளர் நினைத்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

ரூ. 2000 டோக்கன்

கடையின் பெயர் மற்றும் ரூ.2000 என அச்சிடப்பட்ட டோக்கனை கடை உரிமையாளரிடம் கொடுத்த பொதுமக்கள் 2000 ரூபாய்க்கு ஏற்ப மளிகைக் பொருட்களை கொடுக்கும்படி கேட்டனர். அதிர்ச்சியடைந்த ஷேக் முகமது அதுகுறித்து விசாரித்தபோது, அரசியல் கட்சியைச் சேர்ந்த சில நபர்கள், அவரது கடைப் பெயரை அச்சிட்டு போலியாக டோக்கன் விநியோகித்தது தெரியவந்தது.

கடையை மூடிய ஓனர்

இதுகுறித்து அவர் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விளக்கியும் பலன் ஏற்படாததால், கடையை இழுத்துப் பூட்டினார் ஷேக் முகமது. மேலும், வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் டோக்கனுக்கு தங்கள் கடை பொறுப்பேற்காது என்றும் அச்சிடப்பட்ட நோட்டீசை கடை கதவில் ஒட்டி விட்டுச் சென்று விட்டார்.

வழக்குப் பதிவு

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்த போது டோக்கனை வழங்கியது அமமுக நிர்வாகி கனகராஜ் என்பது தெரியவந்தது. இதை அறிந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 2000 ரூபாய் டோக்கன் வழங்கிய அமமுக நிர்வாகி, வெள்ளிக்கிழமை அந்த கடைக்கு அருகில் வந்து பணம் பெற்றுக் கொள்ளும்படி தான் சொன்னாரே தவிர மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ள சொல்லவில்லை என தெரியவந்துள்ளது. மக்கள் ஆர்வக்கோளாறில் கடைக்கு போய் மளிகைச் சாமான் கேட்டதால் உண்மை வெளியே வந்துள்ளது.

அமமுக டோக்கன் அல்வா

ஆர்கே நகரில் டிடிவி தினகரன் போட்டியிட்ட போது, 20 ரூபாய் டோக்கன் கொடுத்து குக்கருக்கு வாக்களித்து ஒரு வாரம் கழித்து 20 ஆயிரம் பெற்றுக்கொள்ளுங்கள் என ஏமாற்றிய சம்பவத்திற்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கும்பகோணம் தொகுதியில் 2000 ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்காளர்களுக்கு அல்வா கொடுத்து விட்டனர் அமமுக நிர்வாகிக்கள். டோக்கனை நம்பி குக்கரில் வாக்களித்தவர்கள் இப்போது அந்த டோக்கன் போலி என்று தெரிந்து ஏமாந்து போயுள்ளனர். கும்பகோணம் முழுக்க இப்போது இதே பேச்சுதான்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + twelve =

*