சிஎஸ்கேவிற்கு நடந்த “அதே” சம்பவம்.. நாளைக்கு மேட்ச்.. கோலி பாருங்க எப்படி வசமா சிக்கி இருக்காருன்னு! (படங்கள்)
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு நடந்த அதே சம்பவம் ஒன்று தற்போது பெங்களூர் அணிக்கும் நடந்து உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இதில் பெங்களூர் மற்றும் மும்பை வீரர்கள் சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. முக்கியமாக பெங்களூர் வீரர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பாதிப்பு
சென்னைக்கு வந்த பெங்களூர் அணியில் முதலில் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது . அவரை தொடர்ந்து பெங்களூர் அணியின் டேனியல் சாம்ஸுக்கு தற்போது கொரோனா ஏற்பட்டுள்ளது. படிக்கலுக்கு தற்போது பாசிட்டிவ் என்று வந்துள்ளது .
பாசிட்டிவ்
இதையடுத்து அவர் மீண்டும் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார். வீரர்கள் எல்லோருக்கும் தற்போது டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. டேனியல் சாம்ஸ் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தற்போது பெங்களூர் அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
கொரோனா
அடுத்தடுத்து கொரோனா காரணாமாக பெங்களூர் வீரர்கள் கடந்த 10 நாட்களாக சரியாக பயிற்சி மேற்கொள்ளவில்லை. நாளை ஐபிஎல் போட்டி இருக்கும் நிலையில், முதல் போட்டிக்கு முன்னதாக வீரர்கள் சரியாக பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
படிக்கல்
முக்கியமாக படிக்கல்லுக்கு கொரோனா இல்லை என்றாலும் நாளை இவர் ஆடுவாரா என்பது சந்தேகம்தான். இவர் இப்போதுதான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார் . இனி பயிற்சி மேற்கொள்ள வேண்டும், நாளை இதனால் இவர் களமிறங்குவாரா என்பது சந்தேகமாக உள்ளது. கேப்டன் கோலிக்கு இது மிகப்பெரிய சிக்கலாகி உள்ளது.
சிக்கல்
கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்கும் இதேபோல் கொரோனா சிக்கல் வந்தது. சிஎஸ்கேவில் ரூத்துராஜுக்கு கொரோனா வந்தது, இதனால் ஓப்பனிங்கில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அதே சிக்கல் பெங்களூர் அணிக்கு வந்துள்ளது.
கிண்டல்
கடந்த வருடம் சிஎஸ்கே அணியை பலரும் இதற்காக கிண்டல் செய்த நிலையில் தற்போது பெங்களூர் அணியை கிண்டல் செய்து வருகிறார்கள்.. அப்போது சிஎஸ்கேவிற்கு நடந்தது.. இப்போது உங்களுக்கும் நடக்கிறது என்றது சென்னை ரசிகர்கள் பலர் பெங்களூர் ரசிகர்களை இணையத்தில் வம்பிழுத்து வருகிறார்கள்.