;
Athirady Tamil News

வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் மணிவண்ணிடம் தீவிர விசாரணை!! (படங்கள்)

0

யாழ் மாநகர மேயர் மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணியளவில் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

பரிசோதனைகளின் பின்னர் கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை அவரை சந்திப்பதற்காக வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் மணிவன்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரன் அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை மணிவண்ணனிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவரது கணனி உட்பட சிலபொருட்களும் விசாரணை பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்தும் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் வருகைதந்து விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ் மேயரின் கைதுக்கு தமிழ் எம்.பி.க்கள் சபையில் போர்க்கொடி!!

மணிவண்ணன் கைது இனவாதம், பாசிசம் அடிப்படையிலானது- அவரை உடனடியாக அரசு விடுதலை செய்யவேண்டும்.!!

யாழ். முதல்வர் மணிவண்ணனை சந்திக்கச் சென்ற சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!!

மேயர் கைது பற்றி உள்ளுராட்சி மன்ற அமைப்புக்களுக்கு முதற்கட்டமாக முறையீடு!!

யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் திடீர் கைது.. (நேரடி வீடியோ)

யாழ்.மாநகர காவல்படை; மணிவண்ணன், பார்த்திபன் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பு!!

கொழும்பு மாநகர சபையை பின்பற்றியே, யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை – வி.மணிவண்ணன்!! (வீடியோ)

யாழ்.மாநகர சபையின் காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு அறிவுத்திய பொலிஸார்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + three =

*