;
Athirady Tamil News

தாண்டவம் ஆடிய ராகுல், ஹூடா.. கேப்டன் சஞ்சு போராட்டம் வீண்.. ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் திரில் வெற்றி !! (படங்கள்)

0

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக வருகிறது. பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் இன்று மும்பையில் மேட்ச் நடந்தது. பஞ்சாப்பிற்கும் எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் தற்போது பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.. மும்பை மும்பை மும்பையில் இந்த போட்டி நடக்க உள்ளது. மும்பை பிட்ச் பேட்டிங் பிட்ச் என்பதால் வலிமையான பேட்டிங் ஆர்டருடன் இரண்டு அணிகளும் களமிறங்கி உள்ளது. இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம வலிமையுடன் இருப்பதால் இன்று நடக்கும் ஆட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

எப்படி

இரண்டு அணியிலும் ஹிட்டர்கள் அதிகம் இருக்கிறார்கள். திவாதியா, ஷாருக்கான், ராகுல், சஞ்சு சாம்சன், பட்லர், ஸ்டோக்ஸ் என்று பெரிய படையே இரண்டு அணியிலும் உள்ளது. இதனால் கண்டிப்பாக இன்றைய போட்டி ஹை ஸ்கோர் மேட்சாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்

பஞ்சாப்பிற்கும் எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் தற்போது பவுலிங் தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தானின் அணியின் கேப்டனாக இன்று சஞ்சு சாம்சன் முதல்முறையாக களமிறங்கி உள்ளார். பிட்ச் பேட்டிங் பிட்ச் என்பதால் டாஸ் வென்றது ராஜஸ்தான் அணிக்கு சாதகமாகி உள்ளது.

அணி விவரம்

இன்று ஆடும் பஞ்சாப் அணியில் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான், ஜெய் ரிச்சர்சான், ரைலி மெரிடித், முகமது சாமி, அர்ஷிதீப் சிங் ஆகியோர் ஆடுகிறார்கள்.

ராஜஸ்தான்

இன்று ஆடும் ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ரியான் பராக், சிவம் துபே, ராகுல் திவாதியா, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயஸ் கோபால், சேட்டன் சக்கரியா, முஸ்தாபிக்கர் ரஹ்மான் ஆகியோர் ஆடுகிறார்கள்.

பேட்டிங் இந்த போட்டியில் பேட்டிங் முதல் ஓவரில் இருந்தே பஞ்சாப் அணி அதிரடி காட்டியது. முதல் ஓவரில் இருந்தே 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்று அதிரடி காட்டியது. மயங்க அகர்வால் அவுட் ஆன பின் ஜோடி போட்ட கெயில் – ராகுல் அதிரடி காட்டினார்கள். கெயில் சிக்ஸர், பவுண்டரி என்று அதிரடி காட்டி வெறும் 28 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்.

கெயில்

கெயில் அவுட்டான் பின் பஞ்சாப் அணி காலி என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் தீபக் ஹூடா ஷாக்கிங் சர்ப்ரைஸாக களமிறங்கி வெளுத்து வாங்கினார். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடிய ஹூடா 27 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். அதிலும் இவர் ஷிவம் துபே ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ் அடித்தது. ஸ்பின் பவுலர்கள் ஓவரில் குறி வைத்து சிக்ஸ் அடித்தது என்று தீபக் ஹூடா மாஸ் காட்டினார்.

சிறப்பு

இன்னொரு பக்கம் ராகுலும் அதிரடியாக ஆடினார். இடையிடையே கொஞ்சம் ஸ்லோ ஆனாலும் ராகுலும் அதிரடியாக ஆடி 91 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸ், 7 பவுண்டரி அடக்கம். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தானுக்கு பஞ்சாப் 222 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

சஞ்சு

இதன் பின் இறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் கொஞ்சம் திணறியது. ஓப்பனிங் வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், வோரா இரண்டு பேருமே பெரிதாக ஆடவில்லை. இவர்கள் அவுட்டான் பின் சஞ்சு சாம்சன் இறங்கினார். சஞ்சு சாம்சங் இறங்கியதில் இருந்து தொடர்ந்து அதிரடி காட்டினார். முதல் பந்தில் இருந்தே சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி வந்தார்.

சதம்

ஒரு பக்கம் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 54 பந்தில் 100 அடித்தார். இதில் 5 சிக்ஸ், 12 பவுண்டரி அடக்கம். ஒரு பக்கம் சஞ்சு சாம்சன் அதிரடி காட்ட இன்னொரு பக்கம் ஜோஸ் பட்லர் 25, துபே 23, ரியான் பராக் 23 என்று அடித்து வெளுத்தனர். சிக்ஸ், பவுண்டரி என்று குறைந்த பந்தில் 20-25 ரன்களை இவர்கள் அடித்து ராஜஸ்தானின் ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

வெற்றி

தொடர்ந்து ராஜஸ்தான் அதிரடி காட்டி நிலையில் கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. இதில் 19வது ஓவரில் ஒரு விக்கேட் விழுந்து வெறும் 8 ரன்கள் மட்டுமே சென்றது. அதன்பின் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் சஞ்சு சிறப்பாக ஆடினார். ஆனால் கடைசி பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் சஞ்சு சாம்சன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.