றிசாட் கைது!! வவுனியா நகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!!

அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக வவுனியா நகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். லரீப்
எம் .எஸ் .அப்துல்பாரி, மஞ்சுளா தேவி ஆகியோரால் முன்வைக்கப்பட்ட பிரேரனை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கண்டனத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.லரீப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்-
றிசாட் பதியுதீனின் கைதானது இந்த நாட்டு முஸ்லிம்களை வேதனை படுத்துகின்ற ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கைதாக காணப்படுகின்றது.மேலும் இந்த ஜனநாயக நாட்டில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்கு தெரியப்படுத்தி சபாநாயகர் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னரே கைது செய்யப்பட வேண்டும். மாறாக இதற்கு மாற்றமாக இந்த கைது இடம் பெற்று இருக்கின்றது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒருமுறை கைது செய்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்து எவ்வித குற்றமும் அற்றவர் என விடுதலை செய்யப்பட்டவர் எமது கட்சியின் தலைவர்
அவரை மீண்டும் இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்பு படுத்தி இடம் பெற்ற இந்த கைது ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்கான கைதாகவே காணப்படுகின்றது.
சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து முஸ்லிம் தலைமைகளை அவர்களின் குரல்களை நசுக்கும் செயற்பாடுகளையும் கைவிட்டுவிட்டு நாட்டின் தற்போது கொரோனா 3வது அலை வீசுகின்றது அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளுமாறும் வேண்டிக்கொள்ளப்பட்டது .
இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன்,நா.சேனாதிராஜா,ரி.கே.ராஜலிங்கம் ஆகியோர் றிசாட் பதியூதினின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்பாட்டம்!! (படங்கள்)
றிசாட் பதியுதீன் அவர்களை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)
ரிஷாட் மற்றும் ரியாஜை 3 மாதங்கள் தடுப்புக் காவலில் விசாரிக்க தீர்மானம்!!
ரிசாத் பதியுதீன் கைதிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!!