புங்குடுதீவில் கர்ப்பிணித்தாய் ஒருவர் கொரோனாத் தொற்றால் பாதிப்பு..

புங்குடுதீவில் கர்ப்பிணித்தாய் ஒருவர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
புங்குடுதீவில் ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், முதலாம் வட்டாரத்தில் வசித்து வந்தவரின் கர்ப்பிணித் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது பன்னீர்க்குடம் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியர்களின் துரித செயற்பாட்டால் தாயும் சேயும் நலமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
எம்மினிய மக்களே! உலகெங்கும் பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றின் 2ம் அலை இலங்கையிலும் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது, அரசாங்க மருத்துவ சங்கங்கள் எவ்வளவோ சமூக அக்கறையுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வந்தாலும் மக்கள் பின்பற்றுகின்றனரா? என்றால், இல்லை என்றே சுகாதாரப் பிரிவினர் கவலை கொள்கின்றனர்.
மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் தான் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருகின்றது. எனவே எமது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வேண்டி நிற்கின்றனர் சுகாதாரப்பிரிவினர்.
-“அதிரடி” இணையத்துக்காக புங்குடுதீவில் இருந்து நலன்விரும்பி-