பொதுத்தேர்வு ரத்து: குழு அமைத்து மதிப்பெண்களை கணக்கிட சி.பி.எஸ்.சி. முடிவு…!!!

பிரதமர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் வெற்றியை நிர்ணயிப்பதற்கான மதிப்பீடு குறித்து பரிந்துரை வழங்குவதற்கு ஒரு குழுவினை அமைக்க சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது. அந்த குழு வழங்கும் ஆலோசனை அடிப்படையில் மதிப்பீடு திட்டத்தை இறுதிசெய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது.
10-ம் ஆண்டு இறுதி தேர்வு மதிப்பெண் 11, 12-ம் வகுப்புகளில் பள்ளிகள் நடத்திய தேர்வுகள், உள்மதிப்பீடு மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற செயல்முறை தேர்வு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்வது குறித்து ஒரு திட்டம் வகுக்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்: மாணவர்கள் நலன்கருதி தேர்வு ரத்து: பிரதமர் மோடி
இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் அனைத்து பள்ளிகளிடமிருந்தும். மாணவர்களின் மதிப்பீடுகளைப் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, எப்படி மதிப்பெண் கணக்கிடப்பட்டதோ, அதே முறையை பின்பற்றவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.