புங்குடுதீவில் இன்றுகாலை “கசிப்புக் கோஷ்டி” சுற்றிவளைப்பு.. (படங்கள்)

புங்குடுதீவில் இன்றுகாலை “கசிப்புக் கோஷ்டி” சுற்றிவளைப்பு.. (படங்கள்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக அரசாங்கத்தால் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டு அனைத்து மதுபானச்சாலைகளும் மூடப்பட்டுள்ளன, இதனால் மதுப்பிரியர்கள் செய்வதறியாது அல்லோல கல்லல்பட்டு அவதியுறுகின்றனர்.
யாழ்குடாநாட்டில் அதிக விலை கொடுத்து சட்டவிரோத சாராய வியாபாரிகளிடம் வாங்கி தாகத்தை தீர்த்து மகிழ்கின்றனர். ஆனாலும் கள்ளச்சாராயம் காய்ச்சி (கசிப்பு) விற்று பணம் சம்பாதிக்கும் குழுக்களும் ஆங்காங்கே (தமது பழைய தொழிலை கசிப்பு வடித்தல்) தலையெடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகத் தான் புங்குடுதீவில் பல சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மண்கடத்தல் மாபியா மயூரன், கஞ்சா ரமேஷ் குழுவினரின் நீண்டகால கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தினை இன்று காலை குறிகாட்டுவான் பொலிஸ் போஸற் பொறுப்பதிகாரி சுரேஷ் தலைமையிலான அணியினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன்போது பிரதான சூத்திரதாரிகள் தப்பியோட, உதவியாளர்கள் கசிப்பு குடிகார வாடிக்கையாளர்கள் பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் இரும்புத்துகள்கள், மற்றும் இரண்டுகிலோ சீமெந்து பழுதடைந்த பழவகைகள் இறந்த தவளைகளும் கைப்பற்றப் பட்டுள்ளதாக நம்பகமான தகவலும் கிடைத்துள்ளது.
நீதிமன்ற செயற்பாடுகள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இதுதவிர ஏனைய இடங்களில் நடைபெறும் சட்டவிரோத கசிப்புக் காய்ச்சிகளின் பெயர் விபரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர்களைத்தேடி ஆதாரபூர்வமாக கைது செய்ய உள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரியை மேற்கோள்காட்டி எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.