புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில், நான்கு கொரோனாத் தொற்றாளர்கள்..!

புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில் நான்கு கொரோனாத் தொற்றாளர்கள்..!
புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில் நான்கு கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர், அவர்களோடு தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதேச சுகாதாரப் பரிசோதகர் திரு வ.அபராஜ் அவர்கள் தற்போதுவரை ஈடுபட்டு வருகின்றார்.
புங்குடுதீவு முழுவதும் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ள அதேவேளை சமூகவலைத் தளங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவது மக்களை அச்சநிலையில் ஆழ்த்தியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
-புங்குடுதீவில் இருந்து அதிரடிச்செய்திக்காக கயல்விழி