;
Athirady Tamil News

சிறுவர்களின் பாதுகாப்பு பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்!!

0

சிறுவர்களின் பாதுகாப்பு பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை பாதுகாக்கத் தேவையான சட்டங்கள் அமுலில் உள்ளன.

ஆனால், இவ்வாறான சட்டங்கள் முறையான விதத்தில் அமுல்படுத்தப்படுவதில்லை. தோட்டப் புறங்களைச் சேர்ந்த இளவயது சிறுவர்கள் நகர்ப் பிரதேசங்களில் பணியாற்றுகிறார்கள். இது 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

தற்சமயம் நிலவும் கொரோனா வைரஸ் பரவலினால் பாடசாலைகளை விட்டு, இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 12 =

*