;
Athirady Tamil News

கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறாதவர்களின் விவரங்களைத் திரட்ட ஜனாதிபதி பணிப்பு!!

0

கொவிட் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பொன்றை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது, நாட்டின் அனைத்து பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் தடுப்பு விசேட குழுவுடன் இன்று பிற்பகல் நடைபெற்ற போதே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பிரதேச செயலகங்கள் ரீதியாக இந்த விடயம் தொடர்பில் கணக்கெடுப்பை நடத்தி, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் ஆய்வுகளை நடத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தேவை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு தெளிவூட்டல்களை வழங்கியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 7 =

*