;
Athirady Tamil News

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறிட் வீதி திறப்பு!!

0

வவுணத்தீவு பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட பகுதியில் வீதி பெருந்தெரு அமைச்சினால் 49 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சொருவா முனை விளாவெட்டுவான் 2 கிலோமீற்றர் நீளமான கொங்கிறிட் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தலைமையில் இடம்பெற்றது

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான சி. சந்திரகாந்தன் கலந்து கொண்டு இவ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இவ்வீதியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

குறித்த 2 கிலோமீட்டர் நீளமான கொங்கிறீட் வீதியானது கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வீதி பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் பா. உ சந்திரகாந்தனின் சிபாரிசில் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வீதியானது மக்களின் பாவனைக்கு திறந்து விடப்பட்டது.

குறித்த இந்த விதியானது முன்னர் களிமண்ணினால் காணப்பட்ட போது மக்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று எதுவித சிரமமும் இன்றி மக்கள் பயணிக்ககூடிய வகையில் இந்த வீதி அமைக்க ப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் சிவகுமார், பிரதம பொறியியலாளர் பரதன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் ஒப்பந்தக்காரர் செல்வராசா, கிராமிய குழுக்களின் பிரதிநிதிகள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.