;
Athirady Tamil News

பொலிஸாரின் வலையில் சிக்கிய எரிபொருள் மோசடி கும்பல்!! (படங்கள்)

0

வெயங்கொட-வந்துரவ பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலை நுழைவுப் பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த எரிபொருள் வியாபாரத்தை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

சீன நிறுவனத்தினால் அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுவரும் வாகனங்களில் இருந்து இவ்வாறு எரிபொருள் பெறப்பட்டு வந்துள்ளன.

இவ்வாறு வாகனங்களில் இருந்து எரிபொருளை பெறுவதற்காக கெப் ரக வாகனத்தின் பின்புற பகுதியில் சிறிய எரிபொருள் கொள்கலன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட 1 பவுசர் உட்பட மேலும் 5 வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயங்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + four =

*