;
Athirady Tamil News

வட மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 3 இலட்சத்து 35 ஆயிரத்து 683 பேர் நேற்றுவரை கொவிட் 19 தடுப்பூசி !!

0

வட மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 3 இலட்சத்து 35 ஆயிரத்து 683 பேர் நேற்றுவரை கொவிட் 19 தடுப்பூசி பெற்றுள்ளனர்.

மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையினரில் இது 51 வீதமாகும்.

நேற்று மட்டும் வட மாகாணத்தில் 49,803 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் நேற்று 23,422 பேர், வவுனியாவில் 11,292, கிளிநொச்சியில் – 8,430

முல்லைத்தீவில் – 6,659 பேர் நேற்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

யாழ்.மாவட்டத்தில் மட்டும் 3-ஆம் கட்ட தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கடந்த 3 நாட்களில் 63,490 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டன. நேற்று சனிக்கிழமை மூன்றாவது நாளில் 23,422 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வியாழக்கிழமை 18,046 பேருக்கும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 22,022 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு 2 இலட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. அத்துடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50,000 வவுனியா மாவட்டத்துக்கு 75 ஆயிரம் என 375,000 தடுப்பூசிகள் அண்மையில் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − 5 =

*