;
Athirady Tamil News

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் சுவாமி தூக்கிய இருவருக்கு கொரோனா தொற்று!!

0

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் சுவாமி தூக்கிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மகோற்சவ தின திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் உற்சவ தினத்தில் சுவாமி தூக்கிய பக்தர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் தரப்பு தகவல்களின் அடிப்படையில் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு சுகாதார – பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக மேல் நடவடிக்கையினை பிரதேச சுகாதாரத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் திருவிழா வழமை போன்று நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*