;
Athirady Tamil News

கொவிட் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கும் சட்டம்!!

0

நாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை கட்டாயமாக்கும் சட்டம் வகுக்கப்படுகின்றமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத நபர்கள் குறித்து, கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் ஆராய்ந்து, அதற்கான அரச பொறிமுறையொன்றை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற் சென்று, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான சட்டங்களை வகுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக லலித் வீரதுங்க மேலும் கூறியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*