;
Athirady Tamil News

கரூர் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 20½ பவுன் நகைகள் கொள்ளை..!!

0

கரூர் மண்மங்கலம் அருகே உள்ள மேற்கூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 58). இவர் கரூர் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவுன் (50). இவர் தளவாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை லோகநாதன் கரூருக்கு சென்று விட்டார். லோகநாதனின் மனைவி பவுன் தனது 2 மகன்களுடன் வீட்டை பூட்டி விட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் லோகநாதன் கரூருக்கு சென்று விட்டு நேற்று மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 20½ பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து லோகநாதன் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 8 =

*