;
Athirady Tamil News

மேலகிருஷ்ணன்புதூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல் – கல்லூரி மாணவர் பலி..!!

0

மண்டைக்காடு விளாத்திவிளையை சேர்ந்தவர் ஜெயந்தன். இவருடைய மனைவி ஷிபா. இவர்களுடைய மகன் சாமுவேல் ஜெய்சாந்த் (வயது 23). இவர் திருவிதாங்கோடு அருகே உள்ள கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் சாமுவேல் ஜெய்சாந்த் கோவில்பட்டியில் ஒரு தேர்வு எழுதுவதற்கு சென்றார். பின்னர், மாலையில் வீடு திரும்புவதற்காக ேமாட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

சுசீந்திரம் அருகே புத்தளத்தில் இருந்து மேலகிருஷ்ணன்புதூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாமுவேல் ஜெய்சாந்த் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சாமுவேல் ஜெய்சாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை ஜெயந்தன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி காரை ஓட்டி வந்த வடக்கு சூரங்குடியை சேர்ந்த ஷாஜகான் ஹமீது (36) என்பவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*