;
Athirady Tamil News

வேடதாரி சஞ்சிகை வெளியீடு !!

0

புத்தாக்க அரங்க இயக்கத்தின் வெளியீடாக எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரை பிரதம ஆசிரியர்களாகக் கொண்டு வேடதாரி அரங்கிற்கான சஞ்சிகை வெளிவந்துள்ளது.
சஞ்சிகை வெளியீட்டின் முதற்பிரதியை திருமறைக்கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யாழ்ப்பாணம் கல்வி வலய நாடகமும் அரங்கியலும் ஆசிரிய ஆலோசகர் ஜோன்சன் ராஜ்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

திருமறைக்கலாமன்றத்தின் ஸ்தாபகர் கலாநிதி கலைமாமேதை அருட்திரு மரியசேவியர் அடிகளாரின் சிறப்பு இதழாக வெளிவந்துள்ளது.

மரிய சேவியர் அடிகளார் பற்றிய பேராசிரியர் சி.மௌனகுரு ,செ.அன்புராசா அடிகளார் ,அருட்திரு அன்ரன் ஸ்ரிபன், அ.தாசீசியஸ் ,ஜோன்சன் ராஜ்குமார், சுகன்யா அரவிந்தன் ,சாம் பிரதீபன், ம.யேசுதாசன் ,வைதேகி எமில் ,நவதர்சினி கருணாகரன் ,அன்ரன்பொன்ராசா , கிருபாமேரி வசீகரன் ஆகியோரின் ஆக்கங்களும் மேலும் கலாநிதி சி.ஜெயசங்கர், வணபிதா ரி.எஸ்.யோசுவா, ச.கிருபானந்தன், செ.செல்வக்குமார் ற.தர்மினி ,பூ.தேவராசா ,எஸ்.ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன், கு.குகதாசன், எஸ்.ரி.திஸ்ணுகன் ,ஜெ.ஜெயகபிலன், க.பாலசிங்கம் ஆகியோரின் அரங்குசார் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*