கொரோனாவின் கோரத்தாண்டவம்.. புங்குடுதீவு முடங்குமா?அடங்குமா? (ஆய்வுக் கட்டுரை)
கொரோனாவின் கோரத்தாண்டவம்.. புங்குடுதீவு முடங்குமா?அடங்குமா? (ஆய்வுக் கட்டுரை)
இச்செய்தி எழுதும் இந்த நொடிவரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 தாண்டியுள்ளது இயந்திரச் செயற்பாட்டில் பிரதேச சுகாதார உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் முழுமூச்சாக செயற்படுகிறார்கள்.
ஆனாலும் பொறுப்பற்ற சொரணை சற்றுமல்லாத ஒருசிலரின் அசமந்தப் போக்கால் தான் ”இனியெல்லாம் முடக்கம் இல்லை, நேராக அடக்கம் தான்”என்ற நிலைக்கு களத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றுபவர்களின் கவலையாக உள்ளது. இதிலும் சமூகவலைத்தளங்களில் உலாவரும் “போராளிகளின் தொல்லை” அவர்களுக்கு (அவர்களின் சேவைக்கு) இடையூறு தான்.
சரி எவ்வளவோ முன்னெச்சரிக்கையுடன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புங்குடுதீவுக்குள் இத்தனை தொற்றாளர்கள் எப்படி என்ற கேள்வி இயல்பாகவே எழக்கூடியது தான், அதற்கான விடையாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது..
உண்மையில் புங்குடுதீவு மக்கள் குடுத்து வைத்தவர்கள் தான், புலம்பெயர் நாடுகளில் வாழும் புங்குடுதீவு மக்களில் பலர் இலவசங்களை வாரி வழங்குவதால் புங்குடுதீவில் வாழும் “குடி”மக்களுக்கு கொண்டாட்டங்கள் செய்வதில் “ஆஸ்கார்”அவாடே குடுக்கலாம்.
புலம்பெயர் உறவுகளின் நிதியில் “பொறுப்பற்றவர்களுக்கு” வாழ்வாதார உதவிகளை வழங்குவதினால், இலவசங்களை பெறுவோர்களும் சரி, இலவசங்களை வழங்குவதுக்கு இடைத்தரகர்களாக இருப்போரும் சரி லாபமீட்டுவது மட்டுமே நடைபெறுகிறது.
இப்படி ஒருசாரார் இருக்க இன்னொரு சாரார் “குடி”மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, தாமும் அதில்வரும் வருமானத்தில் ஒரு பங்காளராக இணைந்து லாபமீட்டுவதற்கு தங்களுக்கு இசைந்து போகவல்லவர்களை நம்பி பெருமளவு பணத்தை முதலீடு என்ற போர்வையில் வாரி இறைத்து வாய் பிழந்து நிற்கின்றனர்.
அப்படியானவர்களால் இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தில் ஒருசிலரிடம் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்வதற்காக றோளர் ரக கடற்கலத்தை நீர்கொழும்பு பகுதியில் கொள்வனவு செய்து, புங்குடுதீவு வடமேற்கு கடற்தொழிற் சங்கத்திற்கு உட்பட்ட கடற்பகுதியில் (கழுதைப்பிட்டி கடல்) இருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
“மேலே சொன்ன தலைப்புக்கும், இந்தக் கதைக்கும் சம்பந்தம் இல்லையே” என்று நீங்கள் உணர்வது புரிகிறது. சரி விடையத்துக்கு வருவோம்.. இந்தக்கடற்கலம் ஆழ்கடல் மீன்பிடி எனும் போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிர்ச்சி செய்தி தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.
இந்திய கடல் எல்லையில் அல்லது ஆழ்கடலில் இந்திய மீனவர்களின் சகவாசத்தோடு, போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களூடாகவே கொரோனா புங்குடுதீவுக்குள் பரவியிருக்கின்றது என்ற முடிவுக்கு வர காரணமாயிருக்கின்றது.
கடற்கலத்தில் பணிபுரிபவர்கள் கரை அடைந்ததும் புங்குடுதீவில் அமைந்துள்ள ஒரே ஒரு மதுபானக்கடையில் மதுப்பிரியர்களோடு ஒட்டி உறவாடியிருக்க வாய்ப்புக்களும் அதிகமாக இருக்கின்றது. தற்போது முடக்கப்பட்டிருக்கும் J:26 பிரிவில் தான் மதுச்சாலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..
தவிர இந்த ஆழகடல் மீன்பிடி கடற்கலத்துக்கு பொறுப்பானவர் தப்பிச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது அவ்வாறாயின் “அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய்”, இன்னும் இன்னும் தொற்றாளர்கள் இனங் காணப்படுகின்றனர். இதுக்கு முடிவு என்ன? அத்தோடு தனியார் பேரூந்து ஓட்டுனர், நடத்துனருக்கான P C R முடிவுகள் இன்று அல்லது நாளை வெளிவரும் பட்சத்தில் நிச்சயமாக புங்குடுதீவு முழுமையாக முடங்கும். அல்லது மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி தம்மைத்தாமே தற்காத்துக் கொள்ளாவிடின் நேராக அடக்கம் தான்.. ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
இன்று வேலணைப் பிரதேச பொதுச் சுகாதாரப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, J/26 கிராம அலுவலர்பிரிவுக்கு உட்பட்ட அம்பலவாணர் அரங்கு, அம்மா கடையடி, பாரதி ஏரியா, Bar அமைந்துள்ள பகுதி அடங்கலாக ஆலடிச்சந்தி, கண்ணகிபுரம் ஒருபகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகம்புலம் பகுதியிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் முடக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதுவரை 72தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைக்குள்ளும் ஆங்காங்கே கிராம அலுவலர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டு வருகின்றது..
(§§§ இக்கட்டுரையின் தொடர்ச்சியாக.. “அதிரடி”யில்,
“புங்குடுதீவில் நடப்பது என்ன?.. புங்குடுதீவு புலம்பெயர் உறவுகளின் நிவாரணங்களும், புங்குடுதீவு “குடி”மக்களின் குளறுபடிகளும்” எனும் தலைப்பில் பலரது முகமூடிகள் நாளை கிழிக்கப்படும்.. -இது தொப்பி அளவானவர்களுக்கு மட்டுமே-
கட்டுரையாக்கம் -“அதிரடி”க்காக.. ஊர்க்குருவி. (மேலதிக தகவல்.. – திரு.குணாளன்)
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்தது..!!