;
Athirady Tamil News

மனைவியின் சிதையில் குதித்து உயிர் விட்ட முதியவர்..!!

0

ஒடிசா மாநிலம் காலஹன்டி மாவட்டம் சியால்ஜோடி கிராமத்தை சேர்ந்தவர் நிலமணி சாபர் (வயது 65). இவருடைய மனைவி ரெய்பாரி (60) நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது உடல், சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

தகன நிகழ்ச்சி முடிந்தவுடன், சம்பிரதாயப்படி, ரெய்பாரியின் 4 மகன்களும், உறவினர்களும் ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர். ஆனால், நிலமணி சாபர், மனைவியின் உடல் எரிந்து கொண்டிருந்த சிதை அருகிலேயே இருந்தார். மனைவியின் பிரிவை அவரால் தாங்க முடியவில்லை.

எனவே, திடீரென மனைவியின் சிதையில் குதித்தார். அவரது உடலிலும் தீப்பிடித்துக் கொண்டது. சற்று நேரத்தில் அவர் உடல் கருகி பலியானார். ஆனால், இச்சம்பவம் குறித்து அவருடைய குடும்பத்தினர் தரப்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. வேறு நபர்கள் மூலம் போலீசார் அறிந்து கொண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − six =

*