;
Athirady Tamil News

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை- ஆய்வில் தகவல்..!!

0

கொரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப் பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளில் ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பாக சமூக ஊடக தளம் ஒன்று நாடு முழுவதும் சமீபத்தில் கள ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவுகள் வருமாறு:-

இந்தியாவில் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 70 சதவீதம் பேருக்கும், கோவேக்சின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 64 சதவீதம் பேருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் சாதாரண பாதிப்பையே ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 75 சதவீதம் பேருக்கும், கோவேக்சின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்ட 78 சதவீதம் பேருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்பட வில்லை. பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் சாதாரண பாதிப்பையே ஏற்படுத்தி உள்ளது.

கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 30 சதவீதம் பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் 29 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 1 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. கோவேக்சின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 30 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், அதில் 1 சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 4 சதவீதம் பேருக்கு தடுப்பூசிக்கு பிறகு கொரோனா தொற்றும், 1 சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

கோவேக்சின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்டவர்களில் 17 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 2 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றும், 3 சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நாடு முழுவதும் 381 மாவட்டங்களில் 40 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டது. அவர்களில் ஆண்கள் 62 சதவீதம் பேர், பெண்கள் 38 சதவீதம் பேர் ஆவர். பெருநகரங்களில் 40 சதவீதம் பேரிடமும், நகராட்சி அளவில் 31 சதவீதம் பேரிடமும், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 25 சதவீதம் பேரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − 3 =

*