;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் நாயை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுமி பலி..!!

0

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கவி நகரை சேர்ந்தவர் லலித். இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9-வது மாடியில் வசித்து வருகிறார். இவரது மனைவி கிரண். இவர்களுக்கு 12 வயதில் ஜோத்னா சர்மா என்ற மகள் இருந்தார்.

நேற்று லலித் வேலைக்கு சென்று விட்டார். கிரண் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஜோத்னா தனது செல்லப் பிராணியான நாயுடன் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

பால்கனியில் உள்ள கிரில்லில் நாய் சிக்கிக் கொண்டது. அந்த நாய் கீழே விழுந்து விடும் அபாயத்தில் இருந்தது. இதனால் சிறுமி ஜோத்னா தனது செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்றார். ஆனால் பரிதாபமாக அவர் 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் ரத்த காயங்களுடன் பலியானார். மாடியில் இருந்து விழுந்து நாயும் இறந்து போனது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாயை காப்பாற்ற போய் 9-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + two =

*