;
Athirady Tamil News

மருந்து பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதி !!

0

நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை காரணமாக மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொழும்பில் இன்று (31) தெரிவித்தார்.

சில மருந்துகள் விரைவாக அங்கிகரிக்கப்பட வேண்டும் என்றாலும் தமது நண்பர்களுக்கு நன்மைகள் இருப்பதால் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்தோர் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக ‘எதிர்க்கட்சியின் சுவாசம்’ திட்டத்தின் 23 வது கட்டத்தின் கீழ் 4,750,000 ரூபாய் மதிப்புள்ள மருத்து உபகரணங்களை மாத்தளை வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்குகையிலேயே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.