;
Athirady Tamil News

வவுனியாவில் கோதுமை மா இரு விலைகளில் விற்பனை!! (படங்கள்)

0

வவுனியாவில் கோதுமை மா இரு விலைகளில் விற்பனை : அசமந்தபோக்காக செயற்படும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை

வவுனியா மாவட்டத்தில் 100ரூபா மற்றும் 115ரூபா என இரு விலைகளில் ஆகியவற்றிக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இரு விலைக்கு விற்பனை செய்யப்படும் கோதுமை மா பையில் ஒரே பொதியிடல் இலக்கம் ஆனால் ஒரு மா பையில் 100 ரூபா என அச்சிடப்பட்டுள்ளது மற்றைய மா பையில் 100 ரூபா என்பதினை அழித்து 115 என எழுதப்பட்டுள்ளது.

வவுனியா பஜார் வீதியிலிருந்து மக்களுக்கு கோதுமை மா விநியோகம் செய்யும் குறித்த நிறுவனத்தினாலேயே இவ்வாறான விலை மாற்றம் செய்து சிறிய வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவா இவற்றினை கண்டும் காணாதும் செயற்படுகின்றனர் என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*