;
Athirady Tamil News

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா !! (வீடியோ படங்கள்)

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

நாட்டில் நடைமுறையில் உள்ள கோவிட்-19 சுகாதார நடைமுறைகளின் கீழ் ஆச்சாரியார்கள், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தொண்டர்களுடன் தேர்த்திருவிழா உள் வீதியில் இடம்பெற்றது.

அதிகாலை இடம்பெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதங்கள் ஒலிக்க காலை 7 மணிக்கு சண்முகப் பெருமான் முன்னே வர வள்ளி, தேவசேனா சமேதரராக வேலவர் பிள்ளைத் தேரில் உள்வீதியுலா வந்து காட்சியளித்தார்.

நல்லூர்க் கந்தனின் அடியவர்கள் வீட்டிலிருந்து வழிபாடுகளை முன்னெடுக்கும் வகையில் தேவஸ்தானத்தினால் நேரலையில் நிகழ்வுகள் ஒளி பரப்பப்பட்டன .


You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + one =

*