;
Athirady Tamil News

யாழ். மாவட்டத்தில் 20 தொடக்கம் 29 வயதுடையவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர்!!

0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் 20 தொடக்கம் 29 வயதுடையவர்கள் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்று சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரச, தனியார் துறை ஊழியர்கள் என 20 தொடக்கம் 29 வயதுடைய குறிப்பிட்டளவானோர் கோவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 தொடக்கம் 29 வயதுடையவர்கள் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்று தகவல் வழங்கப்பட்டுள்ள எனக் கூறிய அவர், அவர்களுக்கான தடுப்பூசி அடுத்த சில நாள்களில் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டில் 20 முதல் 29 வயதுடையவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் நாளை ஆரம்பிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிமை (செப். 02) வரை 41.6 சதவிகித மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளும் போடப்பட்டுள்ளன. 57.9 சதவிகிதம் மக்களுக்கு ஒரு அலகு தடுப்பூசி போடப்பட்டது.

நாட்டில் தற்போது செப்ரெம்பர் 13ஆம் திகதிவரை தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டை மீண்டும் திறக்க அதிகாரிகள் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − four =

*