;
Athirady Tamil News

இதயத்திற்கு இனிக்காது சர்க்கரை!! (மருத்துவம்)

0

ஹார்ட் அட்டாக் வருவதற்கு மது அருந்துதல், புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் முறையற்ற உணவு பழக்கம் காரணம் என்று தான் பலரும் நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில், இது மட்டுமே காரணம் அல்ல. ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், நிச்சயம் அவருக்கும் இதயநோய் தாக்கும் என்கிறார் போர்டிஸ் மலர் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் மதன்மோகன். இதோ அவர் சொல்கிறார்…

இந்தியாவின் மக்கள் தொகையில் 23% பேர் சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 65% பேர் சாக்கரை நோயின் பாதிப்புக்குள்ளானவர்கள் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டியுள்ளது. பொதுவாக ஒருவருக்கு இதயத்தில் வலி என்று வரும்போது தான் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அப்போதுதான் சர்க்கரை நோய் இருப்பது அவர்களுக்கு தெரிய வருகிறது.

சர்க்கரை நோய் இருந்தால் இது இதயத்தின் தமனி ரத்தகுழாயினுள் உட்பகுதியினுள் உள்ள எண்டோதிலியம் என்கிற திசுக்களை சிதைக்க ஆரம்பிக்கும். இது மிகவும் ஆபத்தானது. இதயம் துடிப்பு நின்றுவிடும் சமயங்களில் எக்மோ என்ற கருவியை கொண்டு இதயம் செய்யக் கூடிய பணியை செய்யலாம்.

இதன் மூலம் உடலிலுள்ள மற்ற பாகங்ககள் அனைத்தையும் பாதுக்காக வைத்து கொண்டு, இந்த இடைவெளியில் இரத்த குழாயினுள் அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தை கண்டறிந்து சரி செய்த பிறகு இந்த உயிர் காக்கும் கருவியை (எக்மோ)அகற்றிவிடலாம். இதயத்தில் உள்ள அடைப்பை சரி செய்வதன் மூலம் இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

இந்த கருவியின் மூலம் இறப்பு விகிதத்தையும் வெகுவாக குறைக்க முடியும். இந்த எக்ஸ்ட்ரா கார்ப்போரல் மெமரி ஆக்ஸிஜன் என்ற உயிர் காக்கும் கருவியின் உதவியோடு மிகச் சிறப்பன முறையில் போர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருவர் இதய வலி என்று வந்தால் இதயதிற்கு செல்லும் ரத்த குழாயினுள் அடைப்பு இருக்கிறதா என்பதை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டடிறயபடுகிறது. தற்போது இதில் அட்வான்ஸ்டு முறையில் ரேடியல் ஆஞ்சியோகிராம் கொண்டு கண்டறியப்படுகிறது. இது மிகவும் எளிமையானது.

டிப்ஸ்: உங்கள் ரத்தத்தில் ஹெச்.பி.ஏ1சி – 6.5, ரத்த அழுத்தம் – 130/90, கொலஸ்ட்ரால் – எல்.டி.எல் 75 இருந்தால் நீங்கள் ஆரோக்கியம் குறித்து பயப்படத் தேவையில்லை. எப்போது சர்க்கரை நோய் அறிகுறி தெரிகிறதோ அன்றிலிருந்தே அவர் குறிப்பிட்ட இடைவெளியில் இசிஜி, எக்கோ அல்லது டிரெட்மில் போன்ற ஆய்வுகளை செய்து கொள்ள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*