;
Athirady Tamil News

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இங்கிலாந்து – 71 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு..!

0

இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 4-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38,013 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து நான்காம் இடத்தில் உள்ளது.

இதேபோல், 167 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். மேலும் 12.75 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*