;
Athirady Tamil News

வவுனியா கொரோனா நிலையத்திற்கு 100 பொதிகள் அன்பளிப்பு!! (படங்கள்)

0

வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள கொரோனா மத்திய நிலையத்திற்கு 100 பொதிகள் நேற்று (10) வவுனியா தேவசபை ஊடாக கையளிக்கப்பட்டது.

வவுனியா கொரேனா மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கான அவசிய தேவைக்குட்பட்ட, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உடைகள் அடங்கிய 100 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா நோயாளிகளுக்கான பொருட்கள், வவுனியா தேவசபையின் சிரேஸ்ட போதகர் எட்வேட் ஜோர்ஜ் அவர்களால், கொரோனா மத்திய நிலையத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரி லெப்டினன் கேணல் கியான் பரணவிதானவிடம் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் தலைமை வைத்தியர் குசன் மற்றும் இராணுவத்தினர் கலந்துகொண்ருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*