;
Athirady Tamil News

கிரிக்கெட் உலகுக்கு விடைகொடுத்த யோர்க்கர் கிங் மாலிங்க!! (வீடியோ)

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான, யோர்க்கர் கிங் என்றழைக்கப்படும் லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

38 வயதாகும் லசித் மாலிங்க கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார். எனினும் தொடர்ந்தும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்த லசித் மாலிங்க, இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகம் பெற்றுக்கொண்ட லசித் மாலிங்க இன்று வரையில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். லசித் மாலிங்கவின் ஓய்வுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட கோடிக்கணக்கான ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 18 =

*