;
Athirady Tamil News

பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். நெல் அரவை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு சூர்யா (வயது 14), சந்தோஷ் என்ற மகன்களும் மகள் சுதி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சூர்யா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். துர்காவுக்கும் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்கா கணவரிடம் கோபித்துக் கொண்டு 3 குழந்தைகளுடன் பொன்னேரியை அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மாணவன் சூர்யா திடீரென மாயமானான். அவனை உறவினர்கள் தேடி வந்தனர். அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இதுபற்றி சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கோவில் குளத்தில் அழுகிய நிலையில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைந்து இருந்ததால் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். சிறுவன் சூர்யா மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது நெடுவரம்பாக்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (21) என்பவர் கடைசியாக சூர்யாவை சைக்கிளில் அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் சூர்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை கோவில் குளத்தில் வீசி இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னரே கோவில் குளத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் சிறுவன் சூர்யா என்பது போலீசாருக்கு தெரிந்தது. சூர்யாவின் தாய் துர்காவுக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. நெடுவரம்பாக்கத்தில் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்ததால் நெருக்கம் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்காவும் கோபாலகிருஷ்ணனும், தனிமையில் உல்லாசமாக இருந்ததை சிறுவன் சூர்யா பார்த்துவிட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் சூர்யா தனது தாய் துர்காவிடம் இதுபற்றி தந்தை மற்றும் உறவினர்களிடம் கூறப்போவதாக தெரிவித்து இருக்கிறான். இதனால் பயந்துபோன துர்கா மகன் என்றும் பாராமல் சூர்யாவை தீர்த்து கட்ட கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். அவர்களது திட்டப்படி கடந்த 9-ந்தேதி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சூர்யாவிடம் நைசாக பேச்சு கொடுத்து கோபாலகிருஷ்ணன் தனது சைக்கிளில் அழைத்துச் சென்று இருக்கிறார். பின்னர் கோவில் குளம் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, கோபாலகிருஷ்ணன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவன் சூர்யாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சூர்யா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து சூர்யாவின் உடலை கோவில் குளத்தில் வீசிவிட்டு கோபாலகிருஷ்ணன் தப்பி சென்றுவிட்டார். மகன் கொலை செய்யப்பட்டுவிட்டதை கள்ளக்காதலன் மூலம் அறிந்த துர்கா எந்தவித பதட்டமும் இல்லாமல் இருந்துள்ளார். உறவினர்கள் சூர்யாவை தேடும்போது அவரும் சோகத்தில் தேடுவதுபோல் நடித்தார். துர்கா மீது உறவினர்கள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சிறுவன் சூர்யாவை கோபாலகிருஷ்ணன் சைக்கிளில் அழைத்து செல்வதற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு சிறுவனிடம் சூர்யாவை அழைத்து வருமாறு கூறியுள்ளார். போலீசார் விசாரணையில் இது தெரிந்ததும் கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்தபோது அவரது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தது. இந்த கொலை தொடர்பாக கோபாலகிருஷ்ணன், சிறுவனின் தாய் துர்கா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி தாயே கொலை செய்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….!!

0

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியாவில் செயல்படும் சில தீவிரவாத இயக்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.

மேலும் தசரா பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி ஆகியவை அடுத்தடுத்து வரும் நிலையில் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ராணுவத்தினரும், போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

டெல்லியில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் 6 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த ஜன் முகமது ஷேக், டெல்லியை சேர்ந்த ஒசாமா, உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூல்சந்த், முகமது அபுபக்கர், ஜீஷான் கமர், முகமது ஆமிர் ஜாவித் என்பது தெரிய வந்தது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக பணியாற்றியவர்கள் ஆவர். பிடிபட்ட பயங்கரவாதிகள் 6 பேரும் சதி வேலையில் ஈடுபடப்போவதாக அதிர்ச்சியூட்டும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜீஷான் கமரும், ஒசாமாவும் பாகிஸ்தான் ராணுவத்தில் ஆயுத பயிற்சி பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் பதவியில் இருக்கும் காஜி என்பவர் தலைமையில் இவர்களுக்கு சிந்து மாகாணத்தில் உள்ள ரகசிய முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கையெறி குண்டுகளை தயாரிப்பது, எந்திர துப்பாக்கிகளை கையாள்வது, சாதாரணமாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி ஒரு இடத்தை தீக்கிரையாக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

பிடிபட்ட பயங்கரவாதிகள் டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரில் 4 பயங்கரவாதிகளை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மற்ற 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உளவுத்துறையும் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

அதன்பேரிலேயே தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அவர்கள் வியாபாரிகள் பெயரில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஊடுருவி இருப்பதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாகவும் தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தவும், முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் நோக்கத்திலும் பயங்கரவாதிகள் வந்திருப்பதாக மத்திய உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரை சேர்ந்த வியாபாரிகள் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் உதவியுடன் புதிதாக வியாபாரிகள் யாராவது காஷ்மீரில் இருந்து தமிழகம் வந்துள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் காஷ்மீர், டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகளையும் தொடர்ந்து போலீசார் கண்காணிக்கிறார்கள். தமிழகத்தில் பண்டிகை காலங்கள் நெருங்குவதை தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 6 =

*