;
Athirady Tamil News

வவுனியாவில் விளையாட்டு கழகத்தின் காணியை அபகரிக்க முயற்சி! (படங்கள்)

0

வவுனியா சோபாலபுளியங்குளத்தில், அக்கிராமத்தின் விளையாட்டு மைதானத்தின் காணியை அபகரிக்க அரசியல்வாதிகள் சிலர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
சோபால புளியங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இளஞ்செழியன் விளையாட்டு கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டு கழகத்தின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இளஞ்செழியன் விளையாட்டு காழகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நான்கு ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு தெற்கு தமிழ் பிரதேசசபை உப தவிசாளர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விளையாட்டு கழகத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

வவுனியா சோபாலபுளியங்குளம் பகுதி மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் காணி அபகரிப்பில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசியல் கட்சி சார்ந்த நபர்கள், இளஞ்செழியன் விளையாட்டு கழகத்திற்கு சொந்தமான காணி உட்பட பத்து ஏக்கர் காணியை அபகரிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு காணி அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு விளையாட்டு கழகத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*