;
Athirady Tamil News

ஜனாதிபதியின் பேச்சாளர் ஞானசார தேரர்- சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு!!

0

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இஸ்லாமியர்களின் கடவுளான அல்லாஹ் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமற்ற ஊடகப்பேச்சாளராக ஞானசார தேரர் விளங்குவதாகவும் சாணக்கியன் எம்.பி இதன்போது குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட சாணக்கியன் எம்.பி “இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டதாக சாணக்கியன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

“அடிப்படைவாத தாக்குதல்தாரிகளுக்கு சூத்திரதாரி அல்லாஹ்தானென ஞானசார தேரர் சொல்கிறார்.அவரின் கருத்தை கண்டிக்கிறேன்.இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் மௌனம் காப்பதேன்? எந்த நேரத்திலும் இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென ஞானசார தேரர் கூறுகிறார். அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள்?” எனவும் சாணக்கியன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − thirteen =

*