;
Athirady Tamil News

வவுனியா வைத்தியசாலையில் கோவிட் விடுதியில் நோயாளிகரள பராமரிக்க உறவினர்களுக்கு அனுமதி: வைத்தியசாலை பணிப்பாளர்!!

0

கோவிட் நோயாளர்களின் உள சமூக சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் கீழ் நோயாளர்களை வைத்தியசாலை விடுதியில் உறவினர்கள் பராமரிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாதிதி க.ராகுலன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை முறை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் நோயாளர்களை வைத்தியசாலை விடுதிகளில் வைத்து தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கும் நிலையில் அவர்களது உறவினர்கள், குடும்பத்தினர் அவர்களை பார்வையிடாமையால் உள சமூக சுகாதார ரீதியாக நோயாளர்கள் பாதிப்படைவதுடன், சில நோயாளர்களின் குடும்பத்தினரும் தமது உறவினரை பாராமரிக்க முடியவில்லையே என வேதனை அடைக்கின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு பரீச்சார்த்தமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலை என்பவற்றில் கோவிட் நோயாளர் விடுதிகளில் உறவினர்கள் பார்வையிடுவதற்கும், அவர்களை பராமரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருவதுடன், ஒரு தடவையில் விரும்பிய மூவர் மட்டுமே பாதுகாப்பு அங்கிகள் மற்றும் சுகாதார நடைமுறைகளுடன் அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தமது உறவினர்களை மட்டுமன்றி ஏனையவர்களுக்கும் உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கி பார்வையிட முடியும். அவர்களுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்தும் வேறு மூவருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும். இது அவர்கள் விரும்பும் பட்சத்தில் வைத்தியவசாலை விடுதியின் தேவையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்பதுடன், நோயாளர்களை மன அழுத்தங்களில் இருந்தும் விடுபடவும் இது உதவும் எனவும் மேலும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*