;
Athirady Tamil News

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை !!

0

இரத்தினபுரி, நுவரெலியா, காலி, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் மழையுடனான வானிலை நிலவும் காரணத்தினாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 1 =

*