;
Athirady Tamil News

2 கோடி ரூபாய் கப்பம் கோரிய அறுவர் கைது !!

0

கொஸ்கம களுஅக்கல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரிடம் 2 கோடி ரூபாய் கப்பம் கோரி அச்சுறுத்தியதாகக் கூறப்படும், டுபாயில் வசிக்கும் பிரபல பாதாள உலகக் கோஷ்டி உதவியாளர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து நான்கு வாள்கள், குண்டுகள் இரண்டு, துப்பாக்கி, இரு வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹங்வெல்ல, அதனை சூழ உள்ள பிரதேசங்களைச் சேர்ந்த 20 – 41 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடுவலயைச் சேர்ந்த பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்களான கடுவல சமயங், ஊருஜூவா ஆகியோருடன் இணைந்து பல்வேறு சட்டவிரோதச் செயற்பாடுகளை முன்னெடுத்த பிரபல பாதாள உலகக் கோஷ்டி நபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை இந்த நபரின் ஆலோசனைக்கு அமைய சந்தேகநபர்கள் வர்த்தகரை அச்சுறுத்தி கப்பம் கோரியுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*